Vakku Panninavar Maridar

வாக்குப் பண்ணினவர் மாறிடார்

வாக்குப் பண்ணினவர் மாறிடார்
வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார்
சோர்ந்து போகாதே – நீ
சோர்ந்து போகாதே (2)
உன்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்

  1. அவர் மனிதனல்லவே
    பொய் சொல்வதில்லையே
    அவர் உண்மையுள்ளவர்
    வாக்கு மறப்பதில்லையே
    வாக்குத் தந்தவர் சிறந்தவர்
    சிறந்ததைத் தருபவர்
    ஏமாற்றங்கள் இல்லையே – வாக்குப்
  1. காலங்கள் கடந்ததோ
    தாமதம் ஆனதோ
    வாக்குத்தத்தங்கள் – உன்
    வாழ்வினில் தொலைந்ததோ
    வாக்குத் தந்தவர் சிறந்தவர்
    சிறந்ததைத் தருபவர்
    ஏமாற்றங்கள் இல்லையே – வாக்குப்