Piranthar Piranthar

பிறந்தார் பிறந்தார்

பிறந்தார் பிறந்தார்
வானவர் புவி மானிடர் புகழ்
பாடிட பிறந்தார்

சரணங்கள்

  • மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார்
    மா தேவ தேவனே
    மேன்மை வெறுத்தார்
    மா தியாகியாய் வளர்ந்தார் – ( 2 )
  • இயேசு பிறந்தார் உள்ளமதில்
    இதை எங்கும் சாற்றிடுவோம்
    புசிப்பும் குடிப்பும் தேவ ராஜ்யமல்ல
    பரன் ஆவியில் மகிழ்வோம் – ( 2)
  • கந்தைத் துணியோ கர்த்தருக்கு
    கடும் ஏழ்மைக் கோலமதோ
    விலையேறப் பெற்ற உடை அலங்கரிப்பும்
    வீண் ஆசையும் நமக்கேன் – (2)
  • பாவ உலக மானிடர் மேல்
    பாசம் அடைந்தவரே
    மனக்காரிருளை எம்மில் நீக்கிடும் மெய்
    மா ஜோதியாய்த் திகழ்ந்தார் – ( 2)
  • பொறுமை தாழ்மை அன்புருக்கம்
    பெருந்தன்மை உள்ளவரே
    மரணம் வரையும் தன்னைத் தாழ்த்தினால்
    மேலான நாமம் பெற்றோர் – ( 2)