பக்தரே வாரும் ஆசை ஆவலோடும்
- பக்தரே வாரும் ஆசை ஆவலோடும்
நீர் பாரும், நீர் பாரும் இப்பாலனை;
வானோரின் ராஜன் கிறிஸ்து பிறந்தாரே!
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும், இயேசுவை.
- தேவாதி தேவா,ஜோதியில் ஜோதி,
மானிட தன்மை நீர் வெறுத்திலீர்.
தெய்வ குமாரன், ஒப்பில்லாத மைந்தன்; - மேலோகத்தாரே,மா கெம்பீரத்தோடு
ஜென்ம நற்செய்தி பாடிப்போற்றுமேன்;
விண்ணில் கர்த்தா நீர் மா மகிமை ஏற்பீர்! - இயேசுவே, வாழ்க! இன்று ஜென்மித்தீரே,
புகழும் ஸ்துதியும் உண்டாகவும்;
தந்தையின் வார்த்தை ,மாம்சம் ஆனார் பாரும்.