தகப்பனே தந்தையே
தகப்பனே தந்தையே
தலைநிமிரச் செய்பவர் நீரே – 2
கேடகம் நீரே மகிமையும் நீரே
தலை நிமிரச் செய்பவர் நீரே – 2
சரணம் :
- எதிரிகள் எவ்வளவாய் பெருகிவிட்டனர்
எதிர்த்தெழுவோர் எத்தனை மிகுந்துவிட்டனர் – 2
ஆனாலும் சோர்ந்து போவதில்லை தளர்ந்து விடுவதில்லை
சோர்ந்து போவதில்லை தளர்ந்து விடுவதில்லை
தகப்பன் நீர் தாங்குகிறீர்
என்னைத் தள்ளாட விடமாட்டீர் – 2 (கேடகம் நீரே)
2. படுத்துறங்கி மகிழ்வுடனே விழித்தெழுவேன்
ஏனெனில் கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர் – 2
அச்சமில்லையே கலக்கமில்லையே – 2
வெற்றி தரும் கர்த்தர் என்னோடு
தோல்வி என்றும் எனக்கில்லையே – 2 (கேடகம் நீரே)
3. ஒன்றுக்கும் நான் கலங்காமல் ஸ்தோத்தரிப்பேன்
அறிவுக்கெட்டா பேர் அமைதி பாதுகாக்குதே – 2
நீர் விரும்பத்தக்கவை தூய்மையானவை – 2
அவைகளையே தியானம் செய்கின்றேன்
தினம் அறிக்கை செய்து ஜெயம் எடுப்பேன் – 2 (கேடகம் நீரே)