1 பேது 2: 24 மத் 27: 29 யோவான் 19: 34 மத் 27: 34 மத் 27: 30
Fr.S.J Berkmans
எங்கு போகிறீர் இயேசு தெய்வமே
எனக்காய் சிலுவையை சுமக்கும் தெய்வமே
1.பாரச்சிலுவையோ என் பாவச்சிலுவையோ
நீர் சுமந்தது என் பாவச்சிலுவையோ
உம் உள்ளம் உடைந்ததோ
என் பாவச் சேற்றினால் – எங்கு போகிறீர்
- தீய சிந்தனை நான் நினைத்ததால்
உன் சிரசில் முள்முடி நான் சூட்டினேன்
3.பெருமை கோபத்தால் உம் கன்னம் அறைந்தேனே
என் பொறாமை எரிச்சலால் உம்
விலாவில் குத்தினேனே
- அசுத்த பேச்சுக்கள் நான் பேசி மகிழ்ந்ததால்
கசப்புக்காடியை நான்
குடிக்கக் கொடுத்தேனே - கசையால் அடித்தது என் காம உணர்ச்சியால்
காறித்துப்பியது என்
பகைமை உணர்ச்சியால்

