Singa kuttigal- சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும்

Fr.S.J Berkmans

சங் : 34 : 10 , சங் : 23: 2-6 , பிலி 4: 19


சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும்
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே
குறையில்லையே குறையில்லையே
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே

புல்லுள்ள இடங்களிலே
என்னை மேய்க்கின்றார்
தண்ணீரண்டைக் கூட்டிச் சென்று
தாகம் தீர்க்கின்றார்

எதிரிகள் முன் விருந்தொன்றை
ஆயத்தப்படுத்துகின்றார்
என் தலையை எண்ணெயினால்
அபிஷேகம் செய்கின்றார்

ஆத்துமாவைத் தேற்றுகின்றார்
ஆவி பொழிகின்றார்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னைத் தொடரும்

என் தேவன் தம்முடைய
மகிமை செல்வத்தினால்
குறைகளையே கிறிஸ்துவுக்குள்
நிறைவாக்கி நடத்திடுவார்