ஏசா 59: 19 ஏசா 41:10 சங் 91: 7 எபே 6: 17 லூக் 9: 62 1 சாமு 17: 50 மத் 8:17 எபி 13: 5 எபே 6: 16
Fr.S.J Berkmans
வெற்றிக்கொடி பிடித்திடுவோம் நாம்
வீரநடை நடந்திடுவோம்
வெள்ளம் போல சாத்தான் வந்தாலும்
ஆவி தாமே கொடி பிடிப்பார்
அஞ்சாதே என் மகனே – நீ
அஞ்சாதே என் மகளே
ஆயிரம் தான் துன்பம் வந்தாலும்
அணுகாது அணுகாது
ஆவியின் பட்டயம் உண்டு – நாம்
அலகையை வென்று விட்டோம்
காடானாலும் மேடானாலும்
கர்த்தருக்கு பின் நடப்போம்
கலப்பையில் கை வைத்திட்டோம்
நாம் திரும்பி பார்க்க மாட்டோம்
கோலியாத்தை முறியடிப்போம்
இயேசுவின் நாமத்தினால்
விசுவாச கேடயத்தினால்
பிசாசை வென்றிடுவோம்

