Nadanamadi – நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்

சங் 150 : 6 சங் 150: 5 ஆதி 16: 13 ரோமன் 4: 21 அப் 2: 33 யோவா 6: 68 ஏசா 9: 6

Fr.S.J Berkmans


நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்
நாதா நான் உம்மைத் துதிப்பேன்
கைத்தாள ஓசையுடன்
கர்த்தா நான் உம்மைத் துதிப்பேன்

  1. காண்பவரே காப்பவரே
    கருணை உள்ளவரே
    காலமெல்லாம் வழி நடத்தும்
    கன்மலையே ஸ்தோத்திரம் – ஐயா
  2. வல்லவரே நல்லவரே
    கிருபை உள்ளவரே
    வரங்களெல்லாம் தருபவரே
    வாழ்வது உமக்காக – ஐயா
  3. ஆண்டவரே உம்மைப்
    பிரிந்து யாரிடத்தில் போவோம்
    வாழ்வு தரும் வசனமெல்லாம்
    உம்மிடம் தான் உண்டு – ஐயா
  4. அற்புதமே அதிசயமே
    ஆலோசனைக் கர்த்தரே
    அண்டி வந்தோம் ஆறுதலே
    அடைக்கலமானவரே