Puthiya paadal paadi – புதிய பாடல் பாடி பாடி இயேசு

சங் 96: 1 வெளி 1: 6 ,2 திமோ 1: 17 ஏசா 26: 3 ஏசா 9: 6 சங் 30: 10 ,11

Fr.S.J Berkmans


புதிய பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்
புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்

  1. கழுவினார் இரத்தத்தாலே
    சுகம் தந்தார் காயத்தாலே
    தேற்றினார் வசனத்தாலே
    திடன்தந்தார் ஆவியாலே – எனக்கு
  2. உறுதியாய் பற்றிக் கொண்டோம்
    உம்மையே நம்பி உள்ளோம்
    பூரண சமாதானம்
    புவிதனில் தருபவரே – தினமும்
  3. அதிசயமானவரே
    ஆலோசனைக் கர்த்தரே
    வல்லமை உள்ள தேவா
    வரங்களின் மன்னவனே – தேவா
  4. கூப்பிட்டேன் பதில் வந்தது
    குறைவெல்லாம் நிறைவானது
    மகிமையின் ராஜா அவர்
    மகத்துவமானவரே – இயேசு
  5. மாலையில் அழுகை என்றால்
    காலையில் அக்களிப்பு
    கோபமோ ஒரு நிமிடம்
    கிருபையோ நித்தம் நித்தம் – அவர்