மத் 6:9,10 லூக் 1:78 சங் 126:5,6 யூதா 1:20
Fr.S.J Berkmans
உந்தன் நாமம் மகிமை பெற வேண்டும் கர்த்தாவே
உந்தன் அரசு விரைவில் வரவேண்டும் கர்த்தாவே
ஜெபிக்கிறோம் நாங்கள் துதிக்கிறோம்
- இந்தியா இரட்சகரை அறிய வேண்டுமே
இருளில் உள்ளோர் வெளிச்சத்தையே காண வேண்டுமே - சாத்தான் கோட்டை தகர்ந்து விழ வேண்டுமே
சாபம் நீங்கி சமாதானம் வரணுமே - கண்ணீர் சிந்தி கதறி நாங்கள் அழுகிறோம்
கரம்விரித்து உம்மை நோக்கி பார்க்கிறோம் - சிலுவை இரத்தம் தெளிக்கப்பட வேண்டுமே
ஜீவநதி பெருகியோட வேண்டுமே - ஜெபசேனை எங்கும் எழும்ப வேண்டுமே
உபவாச கூட்டம் பெருக வேண்டுமே

