தேவனுக்கே மகிமை |Devanuke magimai

லூக் 2: 14 ஏசா 50: 5 சங் 9: 18 சங் 9: 18 சங் 9: 10 எபி 2: 18

Fr.S.J Berkmans


தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை
தேடி வந்து மீட்டவரே தினம் உமக்கே மகிமை
ஐயா வாழ்க வாழ்க உம்நாமம் வாழ்க

  1. உன்னத்தில் தேவனுக்கே
    மகிமை உண்டாகட்டும்
    பூமியிலே சமாதானமும்
    பிரியமும் உண்டாகட்டும் – இந்தப்
  2. செவிகளை நீர் திறந்து விட்டீர்
    செய்வோம் உம் சித்தம்
    புவிதனில் உம் விருப்பம்
    பூரணமாகட்டும் – இந்தப்
  3. எளிமையான எங்களையே
    என்றும் நினைப்பவரே
    ஒளிமயமே துணையாளரே
    உள்ளத்தின் ஆறுதலே – எங்கள்
  4. தேடுகிற அனைவருமே
    மகிழ்ந்து களிகூரட்டும்
    பாடுகிற யாவருமே
    பரிசுத்தம் ஆகட்டுமே – இன்று
  5. குறை நீக்கும் வல்லவரே
    கோடி ஸ்தோத்திரமே
    கறைபோக்கும் கர்த்தாவே
    கல்வாரி நாயகனே – பாவக்