Natha Um thirukarathil | நாதா உம்திருக் கரத்தில்

அப் 9;6 சங் 40: 3 சங் 63: 3,4

Fr.S.J Berkmans


நாதா உம் திருக்கரத்தில்
இசைக்கருவி நான்
நாள்தோறும் பயன்படுத்தும்
உந்தன் சித்தம் போல்

  1. ஐயா உம் பாதம் என் தஞ்சமே
    அனுதினம் ஓடி வந்தேன்
    ஆனந்தமே அதிசயமே – 2
  2. எங்கே நான் போக உம் சித்தமோ
    அங்கே நான் சென்றிடுவேன்
    உம் நாமத்தில் ஜெயம் எடுப்பேன்
  3. புதுப்பாடல் தந்து ஆசீர்வதியும்
    பரவசமாகிடுவேன்
    எக்காளம் நான் ஊதிடுவேன்
  4. நிந்தைகள் நெருக்கம் துன்பங்களில்
    துதி பாடி மகிழ்ந்திருப்பேன்
    கிருபை ஒன்றே போதுமைய்யா – உம்
  5. ஊரெல்லாம் செல்வேன் பறை சாற்றுவேன்
    உம் நாமம் உயர்த்திடுவேன்
    சாத்தான் கோட்டை தகர்த்திடுவேன்