யோசுவா 6: 16,20 நியா 7: 20 நியா 14: 5,6 எஸ்தர் 4: 16 ஏசா 40: 31
Fr.S.J Berkmans
எக்காளம் ஊதிடுவோம்
எரிக்கோவை தகர்த்திடுவோம்
கர்த்தரின் நாமம் உயர்த்திடுவோம்
கல்வாரிக் கொடி ஏற்றுவோம்
- கிதியோன்களே புறப்படுங்கள்
எதிரிகளை துரத்திடுங்கள்
தீபங்களை ஏந்திடுங்கள்
தெருத் தெருவாய் நுழைந்திடுங்கள் - சிம்சோன்களே எழும்பிடுங்கள்
வல்லமையால் நிரம்பிடுங்கள்
சீறிவரும் சிங்கங்களை
சிறைபிடித்து கிழித்திடுங்கள் - தெபோராக்களே விழித்திடுங்கள்
உபவாசித்து ஜெபித்திடுங்கள்
எஸ்தர்களே கூடிடுங்கள்
இரவுகளை பகலாக்குங்கள் - அதிகாலையில் காத்திருப்போம்
அபிஷேகத்தால் நிரம்பிடுவோம்
கழுகுபோல பெலனடைந்து
கர்த்தருக்காய் பறந்திடுவோம்

