Parisutha aaviye bakthargal | பரிசுத்த ஆவியே பக்தர்கள்

யோவான் 14: 16 எண் 21: 17 அப் 1: 3 எபே 4: 30 எண் 21: 7 மீகா 7: 15 ஏசா 59: 19

Fr.S.J Berkmans

பரிசுத்த ஆவியே
பக்தர்கள் துணையாளரே
கூட இருப்பவரே
கறைகள் தீர்ப்பவரே

  1. தேற்றிடும் தெய்வமே
    திடம் தருபவரே
    ஊற்றுத் தண்ணீரே
    உள்ளத்தின் ஆறுதலே – எங்கள்
  2. பயங்கள் நீக்கிவிட்டீர்
    பாவங்கள் போக்கிவிட்டீர்
    ஜெயமே உம் வரவால்
    ஜெபமே உம் தயவால் – தினம்
  3. அபிஷேக நாதரே
    அச்சாரமானவரே
    மீட்பின் நாளுக்கென்று
    முத்திரையானவரே – எங்கள்
  4. விடுதலை தருபவரே
    விண்ணப்பம் செய்பவரே
    சாட்சியாய் நிறுத்துகிறீர்
    சத்தியம் போதிக்கிறீர் – தினம்
  5. அயல் மொழி பேசுகிறோம்
    அதிசயம் காண்கிறோம்
    வரங்கள் பெறுகிறோம்
    வளமாய் வாழ்கிறோம்
  6. சத்துரு வரும் போது
    எதிராய் கொடி பிடிப்பீர்
    எக்காளம் ஊதுகிறோம்
    எதிரியை வென்று விட்டோம்