Katti pidithen unthan – கட்டிப்பிடித்தேன் உந்தன் பாதத்தை

எபி 10: 30 எபே 4: 32

Fr.S.J Berkmans


கட்டிப்பிடித்தேன் உந்தன் பாதத்தை
கண்ணீரால் நனைக்கின்றேன் கர்த்தாவே
இலங்கையிலே யுத்தங்கள் ஓய வேண்டுமே
இளைரெல்லாம் இயேசுவுக்காய் வாழவேண்டும்
இரங்கும் ஐயா மனம் இரங்குமையா

  1. துப்பாக்கி ஏந்தும் கைகள்
    உம் வேதம் ஏந்த வேண்டும்
    தப்பாமல் உம் விருப்பம்
    எப்போதும் செய்ய வேண்டும்
  2. பழிக்கு பழி வாங்கும்
    பகைமை ஒழிய வேண்டும்
    மன்னிக்கும் மனப்பான்மை
    தேசத்தில் மலர வேண்டும்
  3. பிரிந்த குடும்பமெல்லாம்
    மறுபடி இணைய வேண்டும்
    பெற்றோரின் கண்ணீர் எல்லாம்
    களிப்பாய் மாற வேண்டும்

Katti pidithen unthan Lyrics in English

Kattippitiththaen unthan paathaththai
Kannnneeraal nanaikkindren karththaavae
Ilangaiyilae yuththangal oya vaenndumae
Ilairellaam Yesuvukkaay vaazavaenndum
Irangum aiyaa manam irangumaiyaa

1.Thuppaakki yaenthum kaikal
Um vaetham aentha vaenndum
Thappaamal um viruppam
Eppothum seyya vaenndum

2.Pazikku pazi vaangum
Pakaimai oziya vaenndum
Mannikkum manappaanmai
Dhaesaththil malara vaenndum

3.Pirintha kudumpamellaam
Marupadi innaiya vaenndum
Pettroarin kannnneer ellaam
Kalippaai maara vaenndum